திடீரென தீப்பிடித்து எரிந்த ஹெலிகப்டர் - 17 இராணுவ வீரர்கள் பரிதாபமாகப் பலி.
கென்யா நாட்டில் இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் 17 இராணுவ வீரர்கள் உயிரிழங்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான ஹெலிகப்டர் ‘மில் மி-17’ ரகத்தை சேர்ந்தது என தெரியவந்துள்து.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
ஆபிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந் நாட்டின் 23 இராணுவ வீரர்கள், வழக்கமான பயிற்சிக்காக ஒரு ஹெலிகப்டரில் தலைநகர் நைரோபியில் இருந்து நேற்றைய தினம் புறப்பட்டனர்.
இந்த ஹெலிகப்டர், நைரோபியின் புறநகரான ஓல்டிங்காவின் எரெமெட் பகுதியில் காலை சுமார் 8 மணிக்கு பறந்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானது.
அந்த ஹெலிகப்டர் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 17 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த ஹெலிகப்டர் விபத்துக்குள்ளானதின் பின்னணி குறித்து உடனடியாக தெரியவரவில்லை. விபத்துக்குள்ளான குறித்த ஹெலிகப்டர் ‘மில் மி-17’ ரகத்தை சேர்ந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment