15 வயது மகளை இணையத்தில் விற்பனை செய்த தாய்.
இணையத்தில் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த சம்பவத்தில் சிறுமியின் தாய் உள்ளிட்ட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 20 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சிறுமியின் தாய், மற்றொரு பெண், சிறுமியை பாலியல் தொழிலுக்கு அழைத்துச் சென்ற வாகன சாரதிகள் இருவர், சிறுமியின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நபர்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய நபர்கள் என 17 பேர் தற்போதுவரை கைதாகி உள்ளனர்.
குறித்த சிறுமியை சுமார் மூன்று மாதங்களாக இணையத்தில் 10,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
சிறுமியை வாடகை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், ஜூலை 7 ஆம் திகதி வீடு சோதனை செய்யப்பட்டது.
இதில் சிறுமியும் சிறுமியை வழிநடத்திய நபரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர் விசாரணையின் போது 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
Post a Comment