கண்டி தேசிய வைத்திய சாலையில் அதிகூடிய கொரோனா மரணங்கள்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இன்று மாத்திரம் 09 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இவ்வாறு உயிரிழந்த அனைவரும் 70 வயதைக் கடந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது. அந்த தகவல்களுக்கமைய, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 03 பேர், தலாத்து ஓயாவைச் சேர்ந்த 03 பேர், கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 02 பேர், கேகாலையைச் சேர்ந்த ஒருவர் என 09 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment