இலங்கையில் கடந்த ஆறு நாட்களில் நூறு பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் கடந்த ஆறு நாட்களில் நூறு பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்றைய தினம் 15 பேர் பலியாகியுள்ளனர்.
பண்டாரகம, அம்பிட்டிய, கனேமுல்ல, ராகம, குளியாபிட்டி, பிபில, கல்கிரியாகம, குளியாபிட்டி, பஸறை, வஸ்கடுவ, நேபட, நாவுத்துடு, போம்புவல, கொழும்பு 7 மற்றும் மடுல்கெல ஆகிய பகுதிகளில் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, நாட்டில் வெறும் 6 நாட்களில் 100 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 3ம் திகதி 700ஆக இருந்த கொரோனா மரணங்கள் 9ம் திகதியில் 801ஆக அதிகரித்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 16 மரணங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்குமாறும், சமூக இடைவெளியினை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Post a Comment