Header Ads

test

நெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது.

 நெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களிடம் கோயில் நகைகளை வாங்கிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஆலயத்தில் திருடிய நகைகள் உருக்கப்பட்ட நிலையிலும் கோபுரக் கலசம் ஒன்று வெட்டப்பட்ட நிலையிலும் 250,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் இருந்து கடந்த 9ஆம் திகதி நகைகள், பணம் மற்றும் கோபுரக் கலசங்கள் காணமல்போயிருந்தன.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments