Header Ads

test

அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா மரணங்கள்.

 மேலும் 38 கொரோனா இறப்புகள் இன்றையதினம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்புகள் இதுவாகும். அந்த எண்ணிக்கையுடன், நாட்டில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 1089 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில், 19 பெண்கள், 19 ஆண்கள் அடங்குவர். இறந்தவர்களில் 77 வயதுக்கு மேற்பட்ட 24 பேரும், 61-70 வயதுக்குட்பட்ட 10 பேரும் அடங்குவர். ஒருவர் 51-60 வயதுக்கு இடைப்பட்டவர், ஒருவர் 41-50 வயதுடையவர், இருவர் 31-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

இறப்புக்கான முக்கிய காரணங்கள் கொவிட் நிமோனியா, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுடன் தொடர்புடைய சிக்கல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments