Header Ads

test

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூர்ய தெரிவித்துள்ளார்.

 நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூர்ய தெரிவித்துள்ளார்.

அதன்படி சில நிறுவனங்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகளை நடாத்துவதை தவிர்க்குமாறும் அவர் வலிறுத்தியுள்ளார். அத்துடன் நிறுவனங்களில் ஊழியர்களை அழைத்து கூட்டங்களை நடாத்துதல், நிகழ்வுகளை நடாத்துதல் போன்ற முற்றாக தவரிக்கப்படவேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களை கருத்தில் கொள்ளாது பொருப்பற்று செயற்ப்படும் நிறுவனங்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகேந்திர பாலசூர்ய குறிப்பிட்டுள்ளார்.


No comments