யாழ்.காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த பொதியால் பரபரப்பு.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 183 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் இலங்கை கடற்படையினரால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொதிகள் கடலில் மிதந்து வந்தவேளை அதனை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் 183 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் காணப்பட்டுள்ளன.
தற்போதய கொரோனா அச்சம் காரணமாக இன்று மாலை குறித்த கஞ்சா பொதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment