கொரோனா தொற்று உறுதியான மாணவனை பரீட்சைக்கு அழைத்து சென்ற மாமா முறையானவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.
கொரோனா தொற்று உறுதியான மாணவனை பரீட்சைக்கு அழைத்து சென்ற மாமா முறையானவருக்கு எதிராகவும் குறித்த மாணவனுக்கு எதிராகவும் கஹத்துட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
சர்வதேச பாடசாலை ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட பரீட்சை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. குறித்த பரீட்சையில் 6ஆயிரம் மாணவர்கள் தோற்றி இருந்தனர்.
குறித்த பரீட்சை எழுதவே மாணவனை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி மாமனானர் அழைத்து சென்றுள்ளார்.
பண்டாரநாயக்கபுர பகுதியை சேர்ந்த குறித்த 14 வயதான மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் வைத்திய சாலைக்கு சுகாதார பிரிவினரால் அழைத்து செல்லப்படுவதற்காக சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.
அந்நிலையில் அன்றைய தினம் சர்வதேச பாடசாலை ஒன்றினால் நடத்தப்பட்ட பரீட்சை நடைபெற்றது. அதற்கு மாணவன் தோற்ற தயாரான நிலையில் இருந்த போதே கொரோனா தொற்று உறுதியானதால் பரீட்சையில் தோற்ற முடியாமல் போய் விட்டதே எனும் கவலையில் வீட்டில் இருந்துள்ளான்.
இதனை அறிந்த மாமனானர் மாணவனின் வீட்டிற்கு சென்று தனது மோட்டார் சைக்கிளில் மாணவனை அழைத்து சென்று பரீட்சையில் தோற்ற வைத்தார்.
மாணவன் பரீட்சையில் தோற்றியதை சக மாணவன் ஒருவன் அறிந்து அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளான்.
தகவலின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த சுகாதர பிரிவினர் மாணவன் பரீட்சையில் தோற்றியதை உறுதிப்படுத்தியதை அடுத்து மாணவனுக்கும் அவனை அழைத்து சென்ற மாமனாருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
Post a Comment