கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் இளைஞர்களால் முற்றுகை - வவுனியாவில் சம்பவம்.
வவுனியாவின் எல்லைப்பகுதியான கல்மடு கண்டல்வேலி குளப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் இளைஞர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது,
குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்றுவரும் நிலையில் பல்வேறு சமூகப்பிரச்சனைகள் ஏற்ப்பட்டு வந்ததுடன், அதனால் நேற்றையதினம் (16) இடம்பெற்ற வாள்வெட்டுச்சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
இதனையடுத்து நேற்றையதினம் இரவு குறித்த பகுதியில் ஒன்றுகூடிய கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தினை முற்றுகையிட்டதுடன், ஐந்திற்கும் மேற்பட்ட கசிப்பு பெரல்களை மீட்டுள்ளனர்.
எனினும் கசிப்பினை உற்பத்திசெய்த நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விஐயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் செயலாளர் அ.அலெக்ஸ் (சுகேந்திரன்), மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் குறித்த கிராமத்திற்கு இன்று விஜயம் செய்து இளைஞர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
Post a Comment