சிகிச்சை பெற்று குணமடைந்த மாணவன் ஒரு மாதத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம், முந்தல பிரதேசத்தில் 19 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம் விஞ்ஞான வித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் ஆனந்த மூர்த்தி சஷிகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர் புத்தளம் நகரத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மாவணனின் தாய் மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய நிலையில் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.அதனை தொடர்ந்து மாணவனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் சிகிச்சை பெற்று குணமடைந்த ஒரு மாதத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மாணவன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர், மாணவனை அதிகாலையில் படிப்பதற்காக எழுப்பும் போது, அவர் எழும்பாமல் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதன்போதே மாணவன் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மாணவனின் உடலம் மீண்டும் கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment