கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இறந்துபோன கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த வைத்தியரின் மனதை உருக்கும் பதிவு.
கடந்த மே மாதம் 4 ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்த தரிந்து சி பெரேரா என்ற வைத்தியர் ஒருவர் தனது முகநூல் தளத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அதில், மாலை 6.30 மணி அளவில் மினுவங்கொடையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த 45 வயதுடைய மூன்று மாத கர்ப்பிணித் தாய் ஒருவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அவருக்கு கடுமையான மூச்சுத் திணரல் இருந்த போதும் தனது கணவரை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், வைத்தியசாலை ஊழியர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்த போதும் அது பயன் அளிக்கவில்லை என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment