யாழில் உணவகத்தில் சமையலில் ஈடுபட்ட நபர் கறிச் சட்டிக்குள் மயங்கி வீழ்ந்து மரணம்.
யாழ்ப்பாணத்தில் உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மந்திகை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராக பணிபுரியும் நபரே உயிரிழந்துள்ளார்.
மந்திகைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த போது வலிப்பு நோய் காரணமாக கறிச் சட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
Post a Comment