Header Ads

test

வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி.

 வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி.

காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியாங்குளம் பகுதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் நேற்றிரவு (6) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் குறித்த பகுதியால் செல்லும் போது அதிவேகமாக பயணித்ததில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ் விபத்தில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய தனியார் பஸ் உரிமையாளரும் மற்றும் அவருடன் பயணித்த 30 வயதுடைய பெண் ஒருவருமே பலியாகியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments