Header Ads

test

வீதியால் சென்ற பெண்ணை தள்ளிவிட்டு சங்கிலி அறுப்பு - யாழ்.கரவெட்டியில் சம்பவம்.

 பருத்தித்துறையில் வீதியால் சென்ற பெண்ணை தள்ளிவிட்டு தங்க சங்கிலி அறுத்த கரவெட்டி இளைஞர் கைது.

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை தள்ளிவிட்டு அணிந்திருந் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய இருவரில் ஒருவரை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 4ஆம் குறுக்குத் தெரு வீதியால் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர், குறித்த பெண்ணை தள்ளிவிழுத்திவிட்டு அவர் அணிந்திருந்த ஒன்டரை பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றிருந்தனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பருத்தித்துறை பொலிசார் கரவெட்டியை சேர்ந்த 24 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.

சங்கிலி அறுப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த மற்றவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.


No comments