பிலியந்தலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கல் நிலையை நீக்கியமை தொடர்பில் அமைச்சர் காமினி லொகுகேயிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதமொன்று பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பபட்டுள்ளது.
பிலியந்தலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கல் நிலையை நீக்கியமை தொடர்பில் அமைச்சர் காமினி லொகுகேயிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரும் கடிதமொன்றை சிவில் அமைப்பொன்று பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளது.
பிலியந்தலையில் விதிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட முடக்கல்நிலைமையை அமைச்சர் தன்னிச்சையாக நீக்கியுள்ளார் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சிங்கள அமைப்பு >அமைச்சரின் நடவடிக்கையால் பிலியந்தலைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பிலியந்தலையில் முடக்கல் நிலையை நீக்குவதற்கான அதிகாரம் தனக்குள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் ஆனால் அது தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தவிர்ப்பு சட்டத்தினை மீறும்வகையில் அமைந்துள்ளது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் முடக்கல் நிலை குறித்த தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பிலியந்தலயில் விதிக்கப்பட்ட முடக்கல் நிலை நீக்கப்பட்டதில் தனக்கு எந்த தொடர்புமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளதையும் குறிப்பிட்ட அமைப்பு தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment