விபத்தில் தனுஜன் - வினோகா இருவரும் உயிரிழந்தனர் இவ் விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள காரணங்கள்..
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தனுஜன் - வினோகா உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே விபத்து நேர்ந்தது.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியை சேர்ந்த பரமேஸ்வரன் தனுஜன் (31), யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் வினோகா (31) ஆகியோரே உயிரிழந்தனர்.
சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன. அதன்பின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் வினோகா வாகனத்தை செலுத்தியதாக கருதப்படுகிறது. வாகனம் அதிவேகமாக பயணித்து விபத்து நேர்ந்தது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
இருவரும் ஆசனப்பட்டியை அணியவில்லை. விபத்தையடுத்து வாகன கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு இருவரும் வெளியே வீசப்பட்டனர். பரமேஸ்வரன் தனுஜன் திருமணமானவர். கொழும்பு- மட்டக்களப்பு சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்.
அவர் மனைவி, பிள்ளைகளை கொழும்பில் விட்டு விட்டு, திரும்பி வரும்போதே விபத்திற்குள்ளாகினார். வினோகா திருமணமாகி பிரிந்து வாழ்கிறார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்தவர்கள் மதுபோதையில் இருக்கவில்லையென்பது உறுதியாகியுள்ளது. இதனால் தூக்க கலக்கம், அதிவேகம் போன்ற காரணங்களினால் விபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.
Post a Comment