சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயற்சித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நெருக்கமான உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் அதற்கான விண்ணப்பம் இன்னமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சென்றடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment