Header Ads

test

பாதுகாப்பற்ற நீர் நிலையில் வீழ்ந்து பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும் உயிரிழப்பு.

 திவுலபிட்டி- ஹல்பே - மனம்பெல்ல பிரதேசத்தில் பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட நீர் நிறைந்த குட்டையில் வீழ்ந்து பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிாிழந்தவர்களுள் 42 வயதான தாயும், 10 வயதான அவரது மகனும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்த மற்றையவர், மேற்படி நபர்களின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் வசித்துவந்த 9 வயதான சிறுமி ஒருவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கீரை பறிக்க சென்ற போது அவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

No comments