வைத்தியசாலைகள் அனைத்தும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதால் வைத்தியசாலைளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையின் காரணமாக வைத்தியசாலைகள் அனைத்தும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதால் வைத்தியசாலையின் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தின் முதலாம் திகதி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 731 ஆக பதிவாகியிருந்தது.
எனினும், ஏப்ரல் மாதத்தின் ஆரம்பம் முதல் மே மாதத்தின் ஆரம்பம் வரையான குறுகிய காலப்பகுதியில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வைத்தியசாலைகளில் உள்ள விடுதிகளுக்கும் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment