வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா ஆரம்பம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவம் இன்று (10.05.) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது
குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பக்தர்கள் ஆலய பிரவேசம் தடை செய்யப்பட்டுள்ளதோடு ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலய சம்பிரதாய அனுட்டானங்களை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக பூசை நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக அவர்களது வீடுகளுக்கு சென்று பாக்குத்தெண்டல் இடம்பெற்றது.
கண்ணகி தெய்வத்தின் பக்தனாகிய பக்தஞானி தென்னிந்தியாவில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கிராமத்தில் தங்கியிருந்த காலத்தில் வற்றாப்பளை பொங்கல் சடங்குகளை ஓர் சீர் வரிசைப்படுத்துவதற்காக பாக்குத்தெண்டல் தொடக்கம் சிலாவத்தை தீர்த்தக்கரையில் தீர்தம் எடுத்தல்
காட்டா விநாயகர் ஆலயத்தில் தீபமேற்றுதல் போன்ற பல சடங்குகளை அருளி நின்றார்
வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாகப்பொங்கல் சடங்கு தொடர்பில் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரபு வழியாக அறிவிக்கும் பொங்கலின் ஓர் ஆரம்ப சடங்கே இவ் பாக்குத்தெண்டல் உட்சவம் என நம்பப்படுகின்றது.
இவ்வாண்டுக்கான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தில் 17-05-2021 திங்கட்கிழமை தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து 24-05-2021 திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கல் உட்சவத்துடன் பொங்கல் நிகழ்வு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment