ஓவ நைட்டில் ஒபாமாவாகிய இலங்கை இளைஞன்.
அபுதாபியின் பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா தொடரில் 227 அதிர்ஷ்டசாலியாக இலங்கையின் முகமது மிஷ்பாக் தெரிவாகியுள்ளார். அதன்மூலம் அவர் 12 மில்லியன் திர்ஹாம்களை பரிசாக (3.3 மில்லியன் அமெரிக்க டொலர்) வென்றுள்ளார்.
இலங்கையை சேர்ந்த முகமது மிஷ்பாக் டுபாயில் தொழில் நிமித்தம் தங்கியுள்ள நிலையில் அவர் தற்போது இலங்கைக்கு விடுமுறையில் வந்துள்ளார். அபுதாபியின் மிகப்பெரிய அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு நிகழ்ச்சியான பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா தொடரின் டிக்கெட் ஒன்றை ஏப்ரல் 29 அன்று வாங்கியுள்ளார்.
அவரது டிக்கெட் எண் 054978 வெற்றியிலக்கமாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் முகமது மிஷ்பக்(வயது-36) வேலை பார்த்துவருகின்றார்.
இந்நிலையில் “இப்போது, நான் இலங்கையில் இருக்கிறேன். நான் விடுமுறையில் இருக்கின்றேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை ”என்று மிஷ்பக் கூறியுள்ளார்.
இதேவேளை மிஷ்பாக்கைத் தவிர, மேலும் இருவர் மில்லியனர்களாக பரிசு வென்றனர். அவர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் அபுதாபி சென்றவர்கள் என கூறப்படுகின்றது.
அதில் ஒருவர் 3 மில்லியன் திர்ஹாமும், மற்றையவர் 1 மில்லியன் திர்ஹாமும் வென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Post a Comment