ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடி கிராமங்கள்வரை கொரோனா பரவுதனை தடுக்க உதவுகள் முன்னாள் எம்பி சந்திகுமார் பிரதமருக்கு கடிதம்.
கிளிநொச்சியில் இயங்கிக்கொண்டிருக்கும் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூலம்
கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் கொரோனா நோய் பரவும்
ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவே குறித்த ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடி
கொரோனா நோய் பரவுவதனை தடுக்க உதவுமாறு கோரி பிரதமருக்கு முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.
சந்திகுமார் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் குறித்த கடித்த்தில் அவர்
மேலும் தெரிவித்துள்ளதாவது
கிளிநொச்சியில் ஒரு மனிதப்பேரவலத்தினைத் தடுப்பதற்காக இந்த அவசர
வேண்டுகோளை நான் விடுக்கிறேன்.
தங்களது ஆட்சிக்காலத்தின் 2010-2015 ஆண்டு காலப்பகுதியில் வடக்கு
கிழக்கில் வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு ஆதரவினை வழங்கும் நோக்குடன்
தொழிற்சாலைகள் நிறுவப்படுவதை ஊக்குவித்தீர்கள். அதற்கமைவாக கிளிநொச்சி
மாவட்டத்திலும் அறிவியல் நகரில் நிறுவப்பட்ட தொழிற்சாலைகள் வறுமையைக்
குறைப்பதில் பிரதான பங்கு வகிக்கின்றன. இருப்பினும்இ தற்போது இந்தத்
தொழிற்சாலைகளே கிளிநொச்சி மாவட்டத்தின் தொலைதூரக் கிராமங்களுக்கு கொரனா
நோயினைப் பரப்பும் மையங்களாக மாறியுள்ளன. சுகாதாரத்துறையினரிடமிருந்து
எனக்குக் கிடைக்கும் நம்பகமான தகவல்களின்படி பத்து ஆடைத்தொழிற்சாலை
ஊழியர்களில் ஒருவர் என்ற வீதத்தில் கொரனா தொற்றிற்குள்ளாகி வருகின்றனர்.
இதுவரை 50ற்கு மேற்பட்ட ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் கிளிநொச்சி
மாவட்டத்தில் கொரனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிவியல் நகரில் உள்ள
உணவுபதனிடும் தொழிற்சாலையில் எழுந்தமானமாக 15 பணியாளர்கள்
பரிசோதிக்கப்பட்டதில்இ 05 பணியாளர்கள் கொரனா தொற்றிற்கு ஆளாகியிருந்தமை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு நோய் காணப்படும் வீதம் 33 ஆகஇ அதிஉயர்
மட்டத்தில் உள்ளது.
இந்தத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்கள் வசிக்கும் கிராமங்களைச்
சேர்ந்த பொதுமக்கள் தற்போதைய நிலை குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர்.
ஏனெனில் இவர்களில் அனேகமானவர்கள் நாட்கூலி வேலைகளில் ஈடுபடுபவர்கள்.
ஆகவேதான் கொரொனா தமது கிராமங்களில் பரவிஇ அதனால் கிராமங்கள்
முடக்கப்பட்டால் தமது நாளாந்த வருமானம் இழக்கப்படும் என்று அவர்கள்
அச்சமடைந்துள்ளனர். அதனாலேயே தமது கிராமங்களிலிருந்து பணியாளர்கள்
தொழிற்சாலைகளுக்குச் செல்வதை கிராமத்தவர்கள் தடுக்க முற்படுகிறார்கள்.
எனக்கு கிடைக்கும் தகவல்களின்படிஇ தொழிற்சாலைகளது உயரதிகாரிகள்
கிராமத்தவர்களது கரிசனையினை 'குழப்பம் விளைவிக்கும் சக்திகளது தூண்டுதல்'
என்றவாறான பிம்பத்தினைப் பாதுகாப்புப் படையினர் மத்தியில் ஏற்படுத்த
முயல்கின்றனர். இது ஒரு பிழையான குற்றச்சாட்டு என தங்களின் கவனத்திற்கு
கொண்டுவருகின்றேன்..
மேலும்இ மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட அனைவரும் உருவாகியுள்ள நிலமை
குறித்த அதீத கரிசனையுடன் இருப்பதையும்இ தொழிற்சாலைகளை தற்காலிகமாக
மூடுவதே மேலும் நோய் கிராமங்களினுள் பரவாது தடுக்க உதவும் என்ற
கருத்துடன் இருப்பதையும்;இ ஆனால் சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும்
தொழில் ஆரோக்கியப் பிரிவானது தேசிய பொருளாதாரத்தினைப் பாதிக்கும் என்ற
காரணத்தினால் இத் தொழிற்சாலைகளை மூட அனுமதிக்கவில்லை எனவும்
கூறப்படுகிறது.
எனவேஇ தாங்கள் இந்த விடயத்தில் தலையிட்டு அனைத்து தொழிற்சாலைப்
பணியாளர்களையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி தொற்றுக்கு
உள்ளானவர்களைத் தனிமைப்படுத்திஇ சகல தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக 14
நாட்களுக்கு மூடிவிடும்படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு பணிவுடன்
வேண்டுகிறேன்.
என முன்னாள் பாராளுமன்ற உறுப்பின்னர் மு. சந்திரகுமார் பிரதமருக்கு
எழுதியுள்ள கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடித்த்தின் பிரதிகள் செயலாளர் சுகாதார அமைச்சு சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் அரச அதிபர் –கிளிநொச்சி பாதுகாப்பு படைகளது
தலைமைத் தளபதி –கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
-கிளிநொச்சி ஆகியோருக்கும் அனுப்பட்டுள்ளது.
Post a Comment