பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று (13) இரவு முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ச்சியாக அமுலாகவுள்ள பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பின்னரே அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அமுலாகவுள்ளதாக அவர் தெளிவுப்படுத்தினார்.
குறித்த மூன்று நாட்களும் பொது மக்கள் வெளியில் செல்வதற்கும், வர்த்தக நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.
எனினும் வைத்தியசாலைகளுக்கு செல்லவும், ஒளடதங்களை கொள்வனவு செய்யவும் அனுமதி வழங்கப்படும்.
மருந்தகங்கள், ஒளடத விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
குறித்த விடயங்களை தவிர்ந்த வேறு எந்தவொரு விடயத்திற்காகவும் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அனுமதி வழங்கப்பட மாட்டாது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ச்சியாக பயணக்காட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment