Header Ads

test

கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பணியாளர் அண்மையில் கொழும்பு மாவட்டத்திற்குச் சென்று திரும்பியிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவலை கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர், மருத்துவர் என்.சரவணபவன் தெரிவித்துள்ளார்.


No comments