Header Ads

test

யாழில் இருந்து சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 யாழில் இருந்து சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து அதிகாலை 4 மணியளவில்  திருகோணமலை  ஹொரவபொத்தான பிரதான வீதியின் பன்மதவாச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றுவதற்காகச் சென்று கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

சாரதியின் கவனயீனத்தால் இவ்விபத்து சம்பவித்துள்ளதக தெரிவிக்கப்படும் நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments