Header Ads

test

கைதடி நாவற்குழியில் இரு வேறு விபத்துக்கள்.

 கைதடி, நாவற்குழியில் அதிக வேகம் காரணமாக  இரு  வேறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து கட்டுப்பாட்டையிழந்து பிரதான வீதியைவிட்டு விலகி  சென்றுள்ளது.

இச்சம்பவம்  கைதடி பாலத்துக்கும்  பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் ஏ-9 வீதியில் இச் சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த பேருந்து தடுமாறிப் பயணித்ததால் எதிரே பயணித்த வாகனங்கள் நிலை தடுமாறியதுடன் பின்னே சென்ற டிப்பர் வீதியிலிருந்து விலக முற்பட்ட போதும் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டது.

கடும் மழை பொழிந்து கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும் இச் சம்பவங்கள் தொடர்பில் தெரிய வருவதாவது -

நாவற்குழி பாலத்தில் கப் வாகனம் ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடும் மழை காரணமாக அதி வேகத்தால் கப் ரக வாகனம் ஒன்றும் குறித்த பகுதியில்  கட்டுப்பாட்டை இழந்து நாவற்குழி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments