Header Ads

test

கொழும்பை அச்சத்தில் ஆழ்த்திய மூன்று மரணங்கள்.

 கொழும்பு மாலம்பே பிரதேசத்தில் மூவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளுக்கு அமைய, அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒரே வீட்டில் வசித்துவந்த கணவன், மனைவியும் அயல்வீட்டு பெண்ணொருவரும் அடங்குவதாக அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 84 – 91 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிகப்படுகின்றது. இதேவேளை உயிரிழந்த தம்பதியினரின் மகனும் அவரது மனைவியும் கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த மற்றைய பெண்ணின் மகளும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.  


No comments