Header Ads

test

கடற்படை தண்ணீர் பவுசர் மோதிநெடுந்தீவு மகா வித்தியாலய மாணவன் படுகாயம்.

 கடற்படையினரது தண்ணீர் பவுசர் மோதி விபத்துக்குள்ளானதில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவன் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த ஏப்ரல்-24 ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த மாணவன் மீது கடற்படையினரது தண்ணீர் பவுசர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள கொத்தியார் வீதியில் இடம்பெற்ற இவ் விபத்து சம்பவத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் அதே பகுதியைச் சேர்ந்த ந.கவிப்பிரியன் (வயது-15) என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவன் கோமா நிலையிலேயே தொடர்ந்து காணப்படுவதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாணவனது குடும்பத்தினர் தெரிவிக்கையில்,

விபத்து சம்பவத்தை அடுத்து விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள போதிலும் விபத்தை ஏற்படுத்திய கடற்படையினரது தண்ணீர் பவுசரையோ, அதனை செலுத்திய கடற்படையினரையோ இதுவரை கைது செய்யவில்லை என்று விசனம் தெரிவித்தனர்.


No comments