கொரோனா வைரஸ் சிறைச்சாலையினுள் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை சுகாதார பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட வேலைத் திட்டம்.
கொரோனா வைரஸ் சிறைச்சாலையினுள் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை சுகாதார பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட வேலைத் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க (Santhana Ekkanayake) தெரிவித்தார்.
அதன்படி, சிறைச்சாலைகளில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் சிறைச்சாலைகளினுள் 246 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகளுக்கு புதிதாக வரும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறைக் கைதிகளுக்கு தொடர்ச்சியாக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுவதாகவும், அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.
Post a Comment