முல்லைத்தீவில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட 9 பேர் கைது.
முல்லைத்தீவு மாவட்டம் - முள்ளியவளை,தண்ணீரூற்று,நீராவிப்பிட்டிப்பகுதிகளில் முகக்கவசம் அணியாத 9 பேர் கைது செய்யப்பட்டதுடன் குறித்த நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் நாடளாவியரீதியில் நடைபெற்று வருகின்றது.
இன்னிலையில் முள்ளியவளை பொலீசாரும்,பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின் போது இரு சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் முகக்கவசம் அணியாமை காரணமாக கைது செய்யப்பட்டு இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த 9 பேரின் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டநீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முள்ளியளை பொலீசார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment