Header Ads

test

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளது.

 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 1,851 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 119,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 810 பேர் நேற்று (06) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,885 ஆக அதிகரித்துள்ளது.


No comments