Header Ads

test

வடக்கில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று.

 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 585 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேரும், வவுனியா மாவட்டத்தில் 9 பேரும் என 60 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தொற்றாளர்களுடன் முதல்நிலைத் தொடர்பாளர்களாக சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் 2 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கும், சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 40 பேருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என 48 பேருக்குக் கோவிட் நோய்த் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 4 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நொதேர்ன் சென்றல் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்குக் கோவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள். பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தொற்றாளர்களுடன் முதல்நிலை தொடர்பை வைத்திருந்த நிலையில் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றார்.


No comments