ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்தும் பணிகள் இன்று (06) முதல் ஆரம்பமாகவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.ஸ்புட்னிக் 5 தடுப்பூசி முதலாவதாக கொழும்பு - கொத்தட்டுவையில் 30 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவினால் உற்பத்தி செய்யப்பட்ட 15,000 ஸ்புட்னிக் - 5 கொவிட்-19 தடுப்பூசிகள் நேற்று முன்தினம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment