Header Ads

test

நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை முதலான 5 மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை முதலான 5 மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி,நுவரெலியா மாவட்டத்தின், நோர்வூட் காவல்துறை அதிகார  பிரிவில், இன்ஜஸ்றி கிராம சேவகர் பிரிவும், ஹட்டன் காவல்துறை அதிகார பிரிவில், போடைஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவும்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின், கடவத்தை காவல்துறை அதிகார பிரிவின், எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 இரத்தினபுரி மாவட்டத்தின், இரத்தினபுரி காவல்துறை அதிகார பிரிவின். கங்குல்விட்டி கிராம சேவகர் பிரிவும், இறக்குவானை காவல்துறை அதிகார பிரிவின், பொத்துபிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவும், களவான காவல்துறை அதிகார பிரிவின் ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில், மொரட்டுமுல்ல காவல்துறை அதிகார பிரிவின், வில்லோர தோட்டம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

 களுத்துறை மாவட்டத்தில், தொடங்கொட காவல்துறை அதிகார பிரிவின், போம்புவல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


No comments