எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.தற்போதைய கொவிட் பரவல் நிலைமையில், சரக்கு போக்குவரத்து இடம்பெறாமையினால் ஏற்பட்டுள்ள கொள்கலன் பற்றாக்குறையின் காரணமாக, சரக்கு போக்குவரத்துக்கான செலவும் சர்வதேச ரீதியில் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment