Header Ads

test

25.05.2021 இன்றைய நாள் எப்படி.

 மேஷராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் திட்டமிட உகந்த நாள்.

ரிஷபராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். காரியங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் அனுகூலம் ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மிதுனராசி அன்பர்களே!

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர் பார்த்த காரியம் இழுபறியாகும். பிள்ளைகளின் பிடிவாதம் சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசாங்க விவகாரங்களில் பொறுமை அவசியம். இன்று நீங்கள்அம்பிகையை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் இறைவழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை சிந்தித்துத் திட்டமிடலாம். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். வேங்கடேச பெருமாளை வழிபடுவது நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்மராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். சூரிய வழிபாடு நன்மை தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரியவர்களிடம் பேசும்போது பணிவு மிக அவசியம்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.

கன்னிராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவைக்காக வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும். விநாயகரை வழிபடுவது நன்று.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

துலாராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள். நரசிம்மரை வழிபடு வது நலம் சேர்க்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் நல்ல தகவல்கள் வந்துசேரும்.

விருச்சிகராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.

தனுசுராசி அன்பர்களே!

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தந்தை வழியில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் அலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு குடும்பப் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற் றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் மகிழ்ச்சியான செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உள்ளது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

மீனராசி அன்பர்களே!

அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிவ பெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.


No comments