கொழும்பில் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி, கொழும்பு பம்பலப்பிட்டி – மிலாகிரிய பகுதியில் இரவுநேர கேளிக்கைவிடுதி ஒன்றில் விருந்து வைத்த 25 பேரை புறக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட இரவுநேர கேளிக்கைவிடுதியில் விருந்துக்குத் தயாராகி வந்த குழுவினர் தொாடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது விருந்தில் கலந்து கொண்ட 07 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கோவிட் 19 இன் புதிய வழிகாட்டுதலின் கீழ், Pub,பார் (Bars),கசினோ (Casino), இரவு நேர களியாட்ட விடுதிகள் மறு அறிவித்தல் வரைக்கும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி குறித்த விருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment