Header Ads

test

யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் உட்பட வடக்கில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் உட்பட வடக்கில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மாதிரி வழங்கிய யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டஙகளில் தலா 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தலா ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள நோதேர்ன் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தர்ம்புரம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட்-19 நோயாளியாக அடையாளம் காணப்பட்ட யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் சிகிச்சை நிலையத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளார்.


No comments