தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 218 பேர் கைது.
கொவிட் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய நேற்று (03) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 5,075 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment