Header Ads

test

இலங்கையில் கொரோனாவினால் நாளாந்தம் 200ற்கும் அதிகமான உயிரிழப்பு வரலாம் என அமெரிக்க பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இலங்கையில் கொரோனாவினால் நாளாந்தம் 200ற்கும் அதிகமான உயிரிழப்பு வரலாம் என அமெரிக்க பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா வைரசினால் நாளாந்தம் 200ற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள் என வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐ.எச்.எம்.மீ தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் நிலைமை மற்றும் உயிரிழப்புக்களின் புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் -  

செப்டம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கையில் 20, 876 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பார்கள்.

ஜூன்14ஆம் திகதியளவில் நாளாந்த உயிரிழப்பு உச்சத்தை அடையும் நாளாந்தம் 264 பேர் கொரோனாவினால் உயிரிழப்பார்கள் எனவும் பின்னர் இந்த உயிரிழப்புகள் நாளாந்தம் 88 ஆக குறைவடையும் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூன் 1ஆம் திகதியளவில் மருத்துவமனை பயன்பாடு உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது..


No comments