போதைப்பொருளை வீட்டில் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரால் கைது.
35 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை வீட்டில் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை காலை பருத்தித்துறை இன்பசிட்டியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரிடமிருந்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப்போருள் கைப்பற்றப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment