வீதியில் விழுந்து கிடந்த நிலைமையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்த நபருக்கு கோவிட் 19 உறுதி.
வீதியில் விழுந்து கிடந்த நிலைமையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு இறப்பின் பின்னர் நடத்திய பீ.சி.ஆர் பரிசோதனையில் அவர் கோவிட் தொற்றாளி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிலாபம் வென்னப்புவை - புஜ்ஜம்பொல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் தேங்காய் பறிப்பதை தனது தொழிலாக செய்து வந்துள்ளார்.
இவர் நேற்று புஜ்ஜம்பொல பிரதேசத்தில் வீதியில் விழுந்து கிடந்த நிலைமையில் 1990 அம்பியூலன்ஸ் வண்டியில் உதவியுடன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment