நீதி கோரி பெண்ணொருவர் தீக்குளிக்க முயற்ச்சி.
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பழக்கடை காணப்படுவதால் அதில் இருந்த பழங்களை பிரதேச சபையினர் எடுத்துச் சென்ற காரணத்தினால் தனக்கு நீதி வேண்டும் என்று கோரி வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் பெண் தனது பிள்ளைகளுடன் சென்று கரவெட்டி பிரதேச சபை முன்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் ப்ரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் நீண்டகாலமாக அங்கு பழக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாகவும் சந்தைக்கு அண்மையில் பழக்கடை இருப்பதால் அது சந்தை வியாபாரத்துக்கு இடையூறு எனத் தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் பழங்களை அள்ளிச் சென்றததாக அப்பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் அவர்கள் அள்ளிச் சென்ற பழங்களுக்கான நட்ட ஈட்டை தமக்கு வழங்குமாறும் கோரியே எரிபொருள் போத்தல் ஒன்றுடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment