Header Ads

test

யாழ்.கற்கோவளத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

 யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் தொடர்ந்தும் தேடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பருத்தித்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

படகு ஒன்றில் நேற்றுமுன்தினம் அவர்கள் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர்.

வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், 47 வயதுடைய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

No comments