காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு.
காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.
இதன்போது, காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என குறிப்பிட்டார்.
மேலும், காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அதனை இரத்து செய்ய நேரிடும் எனவும் அவர் கூறினார்.
Post a Comment