முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர்பலி.
முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,
வள்ளிபுனம் பகுதியில் பாலம் புனரமைப்பு செய்யப்பட்டுவரும் நிலையில் அந்த இடத்திற்கு அருகில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் மிகை வேகத்தால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல்போன நிலையில் கட்டுமான பணிகள் இடம்பெற்றுவரும் பள்ளத்திற்குள் விழுந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,
மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment