ஹக்கல பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்திய பாரவூர்தி சாரதி கைது.
அண்மையில் ஹக்கல பிரதேசத்தில் ஏற்பட்ட பாரவூர்தி விபத்து தொடர்பில் அதன் சாரதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதியன்று பாரவூர்தியொன்று முச்சக்கர வண்டியொன்றின்மேல் கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து பாரவூர்தியின் சாரதி தப்பியோடியிருந்தார்.
குறித்த விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்ததோடு பலத்த காயங்களுக்குள்ளாகிய முச்சக்கர வண்டியின் சாரதி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தப்பியோடிய சாரதி குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததோடு நேற்றைய தினம் குறித்த சாரதி மாத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, புத்தாண்டு காலப்பகுதியில் வாகன விபத்துக்களைப் போன்றே கொரோனா தொற்றிலிருந்தும் தம்மை பாதுகாத்துக் கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment