எரிவாயு சிலிண்டர் வெடித்து கடை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தி ஐயனார் கோவிலடியில் உள்ள கடை ஒன்றில் சிறியரக சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்ததால் வர்த்தக நிலையம் தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கடை உரிமையாளர் வேறு பகுதியில் வசித்துவரும் நிலையில் உணவு சமைப்பதற்காக கடைக்குள் வைத்திருந்த சமையல் எரிவாயு சிலிண்டரே இவ்வாறு வெடித்துள்ளது.
குறித்த சம்பவத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதபோதும் கடையிலிருந்த பெருமளவு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
Post a Comment