முல்லைத்தீவில் வாள்வெட்டு.
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டிற்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -
குறித்த சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டதற்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், வாள்வெட்டினை மேற்கொண்ட சந்தேக நபரை கைதுசெய்துள்ளார்கள்.
மேலும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்க்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment